2022 செப்டெம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• திணைக்களங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி; மற்றும்
• பிரதேச சபைகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 06 (iii) ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கறிக்கையும்
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2018/2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான சென்ட்ரெல் இன்ஜியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கைகள்
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் தேசிய மிருகக்காட்சிச்சாலைகள் திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
அதனையடுத்து, 0953 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






