2022 செப்டெம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான களஞ்சிய வசதிகள் கொள்கலன், முனையங்கள் துறைமுக, வழங்கல் வசதிகள், இயந்திர, படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான தென்னை, கித்துள், பனை செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
(ii) கௌரவ நாமல் ராஜபக்ஷ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
சர்வதேச நாணய நிதிய (IMF) பணியாளர் நிலை ஒப்பந்தம்
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம்
(ii) வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்
(iii) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம்
(iv) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம்
(v) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் - திருத்தங்களுடன் (இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 91; எதிராக 10))
அதனையடுத்து, 1718 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






