2022 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 செப்டெம்பர் 03 ஆம் திகதிய 2295/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கான திருத்தங்கள் தொடர்பில் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையைக் குழுவின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளுடன் அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ றோஹண திஸாநாயக்க
(ii) கௌரவ வசந்த யாப்பாபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள்
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
இலங்கையில் போதைப்பொருள் பாவனை
மேற்சொன்ன வினாவிற்கு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பதிலளித்தனர்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






