2022 செப்டெம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-06 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : 09 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2021 நவம்பர் 24 ஆம் திகதிய 2255/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 64(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 61(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 பெப்ரவரி 07 ஆம் திகதிய 2266/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(vii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 ஏப்ரல் 25 ஆம் திகதிய 2277/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய அமைச்சுசார் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 2ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 07ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






