இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 செப்டெம்பர் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-09-01

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v)    2021 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2016 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
(ix)    2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(x)    2021 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2021 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xiv) 2011 ஆம் ஆண்டினுள் மூன்று கட்டங்களில் நடாத்தப்பட்ட உள்ளூரதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பான தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கை. (பகுதி I மற்றும் பகுதி II)
(xv)    2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கை
(xvi)    2015 ஆம் ஆண்டில் சனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார             
(ii)    கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாக 2022.06.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படுவது)


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom