2022 ஆகஸ்ட் 31ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-31 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXIII ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் VII ஆம் பகுதி மற்றும் ஆறாவது தொகுதியின் XIV மற்றும் XV பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மற்றும் நான்காவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் தோட்ட மக்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் செயற்திட்டத்தின் செயலாற்றல் தொடர்பான அறிக்கையின் - IX ஆம் பகுதி
(iii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• நிதி அமைச்சு, நிதி அமைச்சின் கீழான திணைக்களங்கள் மற்றும் விசேட செலவின அலகுகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி;
• வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 04 ஆம் பகுதி;
• மாநகர சபைகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 06(i) ஆம் பகுதி;
• நகர சபைகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 06(ii) ஆம் பகுதி;
• மாவட்ட செயலகங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி; மற்றும்
• அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(v) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணிகள் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(x) 2021 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான சட்டவரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் நகை தொடர்பான தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2020 ஆம் ஆண்டுக்கான தொல்பொருள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 05 ஆம் திகதிய 2291/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.07.01 முதல் 2022.07.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xx) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxi) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை - நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைமுறைக்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுகாக ஏற்பாடு செய்வதற்கானது
(ii) நீதித்துறை (திருத்தம்) - 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) - 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலத்தை பிரேரித்தார்-
(v) பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தவதற்கானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படுவது)
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 01ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






