2022 ஆகஸ்ட் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-29 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : பிரதி சபாநாயகர் தேர்வுகளின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுக்களை அழித்தல்
D : பாராளுன்ற உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல்
E : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
I : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01;
• பல்கலைக்கழகங்கள், பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02; மற்றும்
• அரசாங்க நிதியங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 03
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின் நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நாற்பத்தி இரண்டாவது வருடாந்த அறிக்கை
(ix) 2020 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(x) 2020 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xii) 2020 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(xiii) 2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்
(xiv) 2020 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xv) 2021 ஆம் ஆண்டுக்கான கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2020 ஆம் ஆண்டுக்கான குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xvii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xviii) 2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xix) 2021 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xx) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3(1) ஆம் பிரிவின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும்இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2022 மே 31 ஆம் திகதிய 2282/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 126 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 31 ஆம் திகதிய 2273/76 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) நொத்தாரிசு (திருத்தம்) - (107 ஆம் அத்தியாயமான) நொத்தாரிசுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) அற்றோணித் தத்துவம் (திருத்தம்) - (122 ஆம் அத்தியாயமான) அற்றோணித் தத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) - (23 ஆம் அத்தியாயமான) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv) ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தம்) - (117 ஆம் அத்தியாயமான) ஆவணங்களைப் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(v) அபாயகரமான விலங்குகள் (திருத்தம்) - (49 ஆம் அத்தியாயமான) அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(vi) விருப்பாவணங்கள் (திருத்தம்) - 60 ஆம் அத்தியாயமான) விருப்பாவணக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(vii) மோசடிகளைத் தடுத்தல் (திருத்தம்) - 70 ஆம் அத்தியாயமான) மோசடிகளைத் தடுத்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் இருபத்தாறு (26) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) அரசாங்கக் கணக்குக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்கக் கணக்குக் குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தேழு (27) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
(iii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தேழு (27) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
(iv) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2022 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தாறு (26) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சிசிர ஜயக்கொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மின்சாரக் கட்டண உயர்வினால் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1620 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






