2022 ஆகஸ்ட் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-12 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கிராம உத்தியோகத்தர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ குமார வெல்கம அவர்களுக்கு “றைகம்புர சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலதத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “ஸியனே கத்திக்காவ நாலக்க கொடஹேவா மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலதத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iii) கெளரவ மதுர விதானகே அவர்களுக்கு “இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” சட்டமூலதத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பாக ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 29ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






