2022 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-10 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான பத்திக், கைத்தறித் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் வலுசக்திப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2018/2019, 2019/2020 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஜீ.எஸ்.எம்.பி. டெக்னிக்கல் சர்விசஸ் (பிரைவட்) லிமிட்டெட்டின் வருடாந்த அறிக்கைகள்
(vii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கைகள்
(viii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூன் 30 ஆம் திகதிய 2286/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், எஸ்.எல்.ரி. கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் மற்றும் வலுமுறைமைகளிலான பொறியியலில் கௌரவ விஞ்ஞான இளமாணி மற்றும் இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்புகளிலான பொறியியல் கௌரவ விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதிய 2240/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தரவு விஞ்ஞானத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2268/87 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், காட்சு — ஹய்லி அட்வான்ஸ்ட் மெடிகல் டெக்னோலொஜி டிறெயினிங் சென்ரர் (பிறைவேட்)லிமிடெட் (கே.ஐ.யூ.) நிறுவனத்தினால் வழங்கப்படும் மென்பொருள் பொறியியலில் விஞ்ஞான இளமாணி சிறப்பு, கணினி வலையமைப்புகள் மற்றும் இணையவெளிப் பாதுகாப்பில் விஞ்ஞான இளமாணி சிறப்பு மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமையில் விஞ்ஞான இளமாணி சிறப்பு தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2268/89 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு திப்புளோமா தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2268/90 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், எஸ்.எல்.ரி. கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் புடவை மற்றும் ஆடைத் தொழினுட்பவியலில் விஞ்ஞான இளமாணி கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 21 ஆம் திகதிய 2272/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் மருத்துவ மற்றும் சுகாதார உற்பத்தி முகாமைத்துவத்தில் கௌரவ விஞ்ஞானி இளமாணி கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஏப்ரல் 21 ஆம் திகதிய 2276/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெகுசன ஊடக அமைச்சின் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
எரிபொருள் நெருக்கடி, மின்சார வாகன இறக்குமதி மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் பதிலளித்தனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தம்) - 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தம்) - (131 ஆம் அத்தியாயமான) கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) - 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தம்) - (131 ஆம் அத்தியாயமான) கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(v) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக
“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு இருபத்து ஒன்பது (29) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-
1. பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. சுகாதாரஅலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26. நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28. பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்தொரு (21) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iv) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (9) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(v) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(vi) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(viii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(ix) அரசாங்க நிதி பற்றிய குழு
நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(x) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்தி மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xi) பின்வரிசைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 126 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பின்வரிசைக் குழுவானது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பிர்கள் ஆகியோரைக் கொண்டிருக்குமாக.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
(i) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
(iv) தவிசாளர் குழாமில் உள்ளடக்கப்படவுள்ள உறுப்பினர்கள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பாக ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






