2022 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXI மற்றும் XXXII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாம் தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXII மற்றும் XXXIII ஆம் பகுதிகளையும்;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVII, XXXVIII மற்றும் XXXIX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாம் தொகுதியின் XXIX ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXX மற்றும் XXXI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVIII , XIX, XX மற்றும் XXI ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2021 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2022 மே 31 ஆம் திகதிய 2282/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xvi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 மே 31 ஆம் திகதிய 2282/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 யூன் 15 ஆம் திகதிய 2284/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதிய 2291/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xix) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.06.01 முதல் 2022.06.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xx) 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான பொது மற்றும் முன்னுரிமை மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மே 31 ஆம் திகதிய 2282/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
க.பொ.த. (உ.த) பரீட்சை 2022 தொடர்பான சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ வசந்த யாப்பாபண்டார
தனக்கு வந்த மரண அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள்
(ii) கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ
தனக்கு வந்த மரண அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“ஒதுக்கீடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) தெரிவுக் குழு
நிலையியற் கட்டளை 114 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காக தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) தெரிவுக்குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் போது தெரிவுக் குழுவில் பின்வரும் பன்னிரண்டு (12) உறுப்பினர்களும் சேவையாற்றுவார்களாக:—
கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ காமினி லொக்குகே
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
கௌரவ சாகர காரியவசம்
சபாநாயகரின் அறிவித்தல்கள்
தெரிவுக் குழுவின் கூட்டம்
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 10ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






