இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஜூலை 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-07-27

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ வஜிர அபேவர்தன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
B : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

C : கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
D : சபை முதல்வர் மற்றும் அரசாங்க முதற்கோலாசான் ஆகியோரது நியமனம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் 2018 இலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான இலங்கையின் நிதி முகாமைத்துவம் மற்றும் அரச கடன் நிர்வாகம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் IV ஆம் பகுதி

B.    
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -  
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்  நான்காவது தொகுதியின் XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும் ; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXII ஆம் பகுதியையும், ஐந்தாம் தொகுதியின் VI ஆம் பகுதியையும் மற்றும் ஆறாம் தொகுதியின் XI, XII மற்றும் XIII ஆம் பகுதிக

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் உள்ளூராட்சி நிறுவனங்களை மேம்படுத்தும் துறைசார்ந்த செயற்திட்டங்களிலிருந்து (புரநெகும) எதிர்பார்த்த பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளும் செயன்முன்னேற்றத்தினை மதிப்பாய்வு செய்தல் தொடர்பான செயலாற்றுகை அறிக்கையின்  VIII ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் நிதியறிக்கைகள்
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2021 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் நிதிச் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் வருடாந்த அறிக்கை
(xiv)    2021 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xv) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூன் 03 ஆம் திகதிய 2282/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvi)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் 5, 7 மற்றும் 8 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூன் 03 ஆம் திகதிய 2282/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலங்கைப் பெற்றோலிய களஞ்சிய முனையம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த                    
(ii)    கௌரவ நிமல் சிறிபால த சில்வா                    
(iii)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க                    
(iv)    கௌரவ புத்திக பத்திறண                    
(v)    கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன                    
(vi)    கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 120; எதிராக 63) பின்னர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom