2022 ஜூலை 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-07-06 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
B: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்று அறிக்கைகளும்
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 16 அமைச்சுசார் மேற்பார்வைக் குழுக்களை தாபிப்பதற்காக முன்வைக்கப்படும் பிரேரணை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2021 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2021 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xvi) 2021 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்கறிக்கையும்
(xvii) 2021 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xviii) 2021 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xix) 2021 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xx) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxi) 2021 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxii) 2021 ஆம் ஆண்டுக்கான அரச வேலைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xxiii) 2021 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xxiv) 2021 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxv) 2021 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxvi) 2021 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxvii) 2021 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxviii) 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxix) 2021 ஆம் ஆண்டுக்கான கிராமப்புறசாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxx) 2021 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxxi) 2021 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxxii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை.
(xxxiii) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxxiv) 2021 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxxv) 2021 ஆம் ஆண்டுக்கான கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxxvi) 2021 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்ட அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxxvii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xxxviii) 2021 ஆம் ஆண்டுக்கான இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxxix) 2021 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xl) 2021 ஆம் ஆண்டுக்கான கிராமிய வயல்கள் மற்றும் அண்மித்த குளங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xli) 2021 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xlii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xliii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் இலங்கை கிரிக்கெட் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ்
(ii) கௌரவ லொஹான் ரத்வத்தே
(iii) கௌரவ எம். டப்ளியூ. டீ. சஹன் பிரதீப் விதான
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
(iii) கௌரவ காமினி வலேபொட
(iv) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடு, வழங்கல் போன்றவை தொடர்பாக கூற்றொன்றினை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நலின் பிரனாந்து அவர்கள் முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இச்சட்டம் எந்த ஆளுக்கு ஏற்புடையதாகின்றதோ அந்த ஆள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகவுள்ள மொத்த விற்பனை வரவின் மீது சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு எனவறியப்படும் அறவீடொன்றை விதிப்பதற்காகவும் சேகரிப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக
“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i) பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தம்)
(ii) மாகாண சபைத் தோ்தல்கள் (திருத்தம்)
(iii) உள்ளூராட்சி அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






