இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஜூலை 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-07-05

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை
(ii)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான பலநோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க விலைமதிப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான பொதுத் தொழில்முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2021 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2021 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2021 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xvi)    2021 ஆம் ஆண்டுக்கான குருநாகல் மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2021 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xviii)    2021 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xix)    2021 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xx)    2020 ஆம் ஆண்டுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xxi)    2021 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxii)    2021 ஆம் ஆண்டுக்கான அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiii)    2021 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiv)    2021  ஆம் ஆண்டுக்கான ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxv)    2021 ஆம் ஆண்டுக்கான வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxvi)    2021 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxvii)    2021 ஆம் ஆண்டுக்கான பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxviii)    2021 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xxix)    2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxx)    2021 ஆம் ஆண்டுக்கான கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வருடாந்த  செயலாற்றுகை அறிக்கை

(xxxi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 யூலை 03 ஆம் திகதிய 2286/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xxxii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

எட்டாவது பாராளுமன்றத்தின் 2016.09.01  ஆம் திகதி தொடக்கம் 2020.03.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய பொது மனுக்கள் பற்றிய குழுவின் ஏழாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் புஷ்பகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய        
(ii)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல
(iii)    கௌரவ ஜயந்த சமரவீர
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    நாட்டிலுள்ள பொருளாதார நிலைமை தொடர்பாக கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் முன்வைத்தார்.
(ii)    இரத்தினக்கல் தொழிற்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக 2021.10.06 அன்று ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகளின் கீழ் கௌரவ வருண லியனகே அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 13 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்
(iii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iv)    ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(v)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள்
(vi)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ உதயகாந்த குணதிலக
(ii)    கௌரவ வேலு குமார்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“எரிபொருள் பிரச்சினைகள் மற்றும் வலுசக்தி தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உதயன கிரிந்திகொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 06ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom