இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஜூலை 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-07-04

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(v)    2021 ஆம் ஆண்டுக்கான மொனறாகலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ix)    2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவப் பல்கலைக்கழத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(xii)    2019 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றுக்களும்
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான வர்ததக அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(xiv) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.05.01 முதல் 2022.05.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கொழும்புப்  பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துறையை நிறுவுவது தொடர்பில், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 பெப்ரவரி 08 ஆம் திகதிய 2005/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர   பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்துறையை நிறுவுவது தொடர்பில், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 யூலை 19 ஆம் திகதிய 2028/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் குடும்ப மருத்துவத் துறையை நிறுவுவது தொடர்பில், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மார்ச் 08 ஆம் திகதிய 2113/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறை மற்றும் ஊடகக் கற்கைகள் துறையினை நிறுவுவது தொடர்பில், உயர்கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மார்ச் 27 ஆம் திகதிய 2116/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல், மரபணுக்கள் மற்றும் உயிரி மருத்துவ தகவலியல் துறை மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தடுப்பாற்றியல் துறையினை நிறுவுவது தொடர்பாக மற்றும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூகவிஞ்ஞான பீடத்தினை நிறுவுதல் தொடர்பாக கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 23 ஆம் திகதிய 2216/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xx)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் நடன, நாடக  பீடம் மற்றும் இசைப்பீடத்தில் கற்கைகள் நெறிகளை நிறுவுவது தொடர்பில், கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 மார்ச் 01 ஆம் திகதிய 2217/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடம் ஆகிய துறைகளை நிறுவுவது தொடர்பபாக  மற்றும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், 1997 மார்ச் 26 ஆம் திகதிய 968/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை நிறுவுவதை இல்லாதொழித்தல் தொடர்பாக கல்வி   அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 யூன் 08 ஆம் திகதிய 2231/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xxii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்துறையினை நிறுவுவது தொடர்பில், கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 டிசம்பர் 08 ஆம் திகதிய 2257/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் பார்வைத்திறன் அளவீட்டுத் துறை நிறுவுவது தொடர்பில், கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 பெப்ரவரி 11 ஆம் திகதிய 2266/73 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் குடும்ப மருத்துவத்  துறையினை நிறுவுவது தொடர்பில், கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மார்ச் 03 ஆம் திகதிய 2269/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையுடன், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையினை நிறுவுவது தொடர்பில், கல்வி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஏப்ரல் 18 ஆம் திகதிய 2276/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)  “சிசிர ஜயக்கொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை மற்றும் கூட்ட அறிக்கை அக்குழுவின் தவிசாளரும் பிரதிச் சபாநாயகருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    
(ii)    கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 யூன் 30 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு முதலீட்டு மேம்பாடு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக.
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவிற்கும் ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


அதனையடுத்து, 1549 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom