இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஜூன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-06-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் ராஜபக்ஷ
(ii)    கௌரவ எஸ்.எம். சந்திரசேன
(iii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார                    
(iv)    கௌரவ அநுர திசாநாயக்க            -     இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கான வசதிகள் தொடர்பாக 2022.06.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 120; எதிராக 36; தவிர்ந்து கொண்டோர் 13)
(ii)    பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ரோஹண பண்டார
(ii)    கௌரவ குணதிலக ராஜபக்ஷ


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இளைஞர் தலைமுறையின் கோரிக்கைகளுக்கு முகவரியிடல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1822 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom