2022 ஜூன் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-06-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய அமைச்சுசார் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர
(ii) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கான வசதிகள்
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களுக்கு “ஜயமக அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையிலான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து தீர்மானங்கள்
(ii) குறைநிரப்புத் தொகை – தலைப்பு 240 – நிகழ்ச்சித்திட்டம் 02
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






