2022 ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-06-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : மின்சக்தி மற்றும் வலுசக்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : அச்சுப் ஆவணங்களுக்கு பதிலாக இலத்திரனியல் பிரதிகளை ஊக்கப்படுத்தல்
E : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் இதர தொடர்புபட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு
F : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஐந்தாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாம் தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் தொகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியினது—
• இலங்கையின் தொற்றாத நாட்பட்ட நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் செயல்பாடுகளை ஒழுங்குறுத்தல் தொடர்பான அறிக்கையின் - VI ஆம் பகுதி; மற்றும்
• இலங்கையின் கடற்கரை மற்றும் கடல்சார் தேசிய பூங்காக்கள் பாதுகாப்பு தொடர்பிலான செயலாற்றுகை அறிக்கையின் - VII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான நீர்வழங்கல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v) 2021 ஆம் ஆண்டுக்கான கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(viii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2022 மார்ச் 28 ஆம் திகதிய 2273/06 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) ஆம் பிரிவின் கீழ் செலுத்த வேண்டிய சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மார்ச் 31 ஆம் திகதிய 2273/74 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.04.01 முதல் 2022.04.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய அமைச்சுசார் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
(ii) கௌரவ அஜித் மான்னப்பெரும
(iii) கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நிர்மாணத்துறை மற்றும் இதர தொழிற்துறை எதிர்கொள்ளும் சிக்கல்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) நாட்டிலுள்ள பொருளாதார நிலைமை தொடர்பாக கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் முன்வைத்தார்.
(ii) மின்சக்தி மற்றும் வலுச்சக்தி தொடர்பில் நாட்டின் நிலைமை தொடர்பில் கூற்றொன்றினை மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள் முன்வைத்தார்.
(iii) நாட்டில் உணவுக்கான ஸ்தீரத்தன்மை தொடர்பில் கூற்றொன்றினை கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
2022 யூன் மாதம் 02 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் பெயர்கள்,
1. நிதி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
2. நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
3. கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
4. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
5. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்; மற்றும்
6. வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
மீளப் பெயரிடப்படுமாக.
(ii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 யூன் 02 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பின்வரும் அமைச்சுசார் ஆலோசைனக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:—
- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. சுற்றுலாத்துறை மற்றும் காணி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவிற்கும் ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் அரசியலமைப்புக்கான இருபத்தியிரண்டாவது திருத்தம் எனும் சட்டமூலம் சபையின் அனுமதியுடன் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களால் மீளபெறப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“2022.06.07 அன்று பிரதம அமைச்சரினால் ஆற்றப்பட்ட விசேட கூற்று” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ செஹான் சேமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 08ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






