இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மே 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-05-20

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குதல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─

•    2008 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்;
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும், இரண்டாவது தொகுதியின் XXX மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்;  
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX மற்றும் XXXI ஆம் பகுதிகளையும்;  
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXVII மற்றும் XXVIII ஆம் பகுதிகளையும்;  மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII, XXVIII மற்றும் XXIX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XV, XVI  மற்றும் XVII ஆம் பகுதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த                    
(ii)    கௌரவ யதாமிணீ குணவர்தன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


ஒத்திவைப்புப் பிரேரணை

“சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1746 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom