இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மே 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-05-19

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ எஸ். ஜகத் சமரவிக்ரம அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் போது 2022.05.19 ஆம் திகதி முதல் தவிசாளர் குழாமில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ : பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் பாராளுமன்ற உறுப்பினர்களால் பறிமுதல் செய்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன                    
(ii)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    
(iii)    கௌரவ உத்திக பிரேமரத்ன                                     -      இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

உணவு பற்றாக்குறைக்கான தீர்வு
 
மேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட முறையில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிதற்காக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் குறித்த பாராளுமன்ற விசேட குழுவுக்கு வழங்கப்பட்ட கால எல்லை, 2022 யூன் 30 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்படுமாக.


ஒத்திவைப்புப் பிரேரணை

“சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1711 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom