2022 மே 17ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-05-17 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ. அவர்களின் மரணம்
C : பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்களின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளல்
D : சபை முதல்வர் மற்றும் அரசாங்க முதற்கோலாசான் ஆகியோரது நியமனம்
E : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகப் பாதுகாப்பு
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும் தேர்வு
கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பில் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“இலங்கை மின்சாரம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களுக்கு “அரசியலமைப்புக்கான இருபத்தோராம் திருத்தச்” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு “அரசியலமைப்புக்கான இருபத்தியிரண்டாவது திருத்தச்” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ டீ. வீரசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1721 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 18ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






