2022 மே 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-05-05 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் ;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும் ; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் III, IV, V, VI மற்றும் VII ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அருந்திக்க பர்னாந்து - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ விஜித ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
மக்கள் முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு நிதி அமைச்சர்,நீதி அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி மற்றும் வலுசக்தி அமைச்சர் மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் பதிலளித்தனர்.
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும் தேர்வு
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பில் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சஞ்சீவ எதிரிமான்ன அவர்களுக்கு “சிறுநீரக மற்றும் நீரிழிவு சிங்க வைத்தியசாலை அறக்கட்டளையைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
(ii) சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் கூற்று பற்றிய ஒத்திவைக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சி
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கபட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






