இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மே 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-05-04

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றுக்களும்
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை

(v) 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.02.24 முதல் 2022.03.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) சந்திப்பின் விளைவுகள் தொடர்பில் கூற்றொன்றினை நிதி அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்கள் முன்வைத்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2022 சனவரி மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முப்பத்திரெண்டு (32) அமைச்சுசார் ஆலோசைனக் குழுக்களுக்கு மேலதிகமாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக.

மேற்படி ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மேற்படி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.

மேற்படி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

(ii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” என மீளப்  பெயரிடப்படுதல் வேண்டும்.

(iii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” என மீளப்  பெயரிடப்படுதல் வேண்டும்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) சந்திப்பின் விளைவுகள் குறித்து கௌரவ நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று தொடர்பிலான கலந்துரையாடல்

விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கபட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 05ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom