இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஏப்ரல் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-04-22

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டு கட்டிடத் தொகுதியின் வருடாந்த அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ போக்குவரத்து அமைச்சரும் கைத்தொழில் அமைச்சருமானவர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ உத்திக பிரேமரத்ன அவர்களுக்கு “இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ நளின் பண்டார ஜயமஹ
(ii)    கௌரவ அமரகீர்த்தி அதுகோரள


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யாமல் க.பொ.த. (சா/த) பரீட்சையை நடாத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1714 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மே 04ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom