இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 ஏப்ரல் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-04-07

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான நேற்றைய விவாதம் சம்பந்தமாக


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது ஒரு கிலோகிராம் சீனிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை ரூபா 50 இல் இருந்து 25 சதம் வரை குறைக்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோரைச் சென்றடைதல் தொடர்பான ஆய்வுக்கான விசேட கணக்காய்வு அறிக்கையின்  - II ஆம் தொகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி லொக்குகே       
(ii)    கௌரவ நிமல் லான்சா                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 4ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-

(i)    மிகைக்கட்டண வரி சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்
(iii)    நீதிமன்றங்களை அவமதிப்புச் செய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


அதனையடுத்து, 1555 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஏப்ரல் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom