இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மார்ச் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-03-25

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிமல் சிறிபால த சில்வா                    
(ii)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண  
(iii)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ                                     
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடைவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையினை சபை ஏற்றுக் கொண்டது-

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2022 மார்ச் 24 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” என மீளப்  பெயரிடப்படுதல் வேண்டும்


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ பெட்டி வீரக்கோன்
(ii)    மறைந்த கௌரவ (செல்வி) க. தங்கேஸ்வரி
(iii)    மறைந்த கௌரவ ஜஸ்டின் கலப்பத்தி
(iv)    மறைந்த கௌரவ எம்.எஸ். செல்லச்சாமி


அதனையடுத்து, 1547 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஏப்ரல் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom