இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மார்ச் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-03-22

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “மிகைக்கட்டண வரி” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்
C : “சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    (i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXII பகுதியையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகள்

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் அரச சார்பற்ற பாடசாலைகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடைமுறைகள் தொடர்பான செயலாற்றுகை அறிக்கையின் - V ஆம் பகுதி

B. (i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─      
•    2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIV பகுதியையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XV பகுதியையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV, XXV மற்றும் XXVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின்  XI, XII, XIII  மற்றும் XIV ஆம் பகுதிகள்

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் மத்திய கலாச்சார நிதியத்தின் தொழிற்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் - I ஆம் பகுதி
(iii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் உள்ளூர் சந்தையில் தரமான உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொடர்பாக இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் வகிபங்கு தொடர்பான செயலாற்றுகை கணக்காய்வு அறிக்கையின் - IV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டறிக்கைகள்
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(viii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 122, 122அ மற்றும் VIIஅ ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதிய 2251/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எஸ்.எம். சந்திரசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்                    
(ii)    கௌரவ இரான் விக்கிரமரத்ன                    
(iii)    கௌரவ கோவிந்தன் கருணாகரம்                    
(iv)    கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2022 மார்ச் 16 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு “வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” என மீளப்  பெயரிடப்படுதல் வேண்டும்

(ii) இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவினால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2021 மார்ச் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2023 ஏப்ரல்  மாதம் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு (ஆதரவாக 86; எதிராக 35) திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ஹேஷா விதானகே
(ii)    கௌரவ வஸந்த யாப்பாபண்டார


அதனையடுத்து, 1710 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 23ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom