இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மார்ச் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-03-11

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க            -     மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ புத்திக பத்திறண             -     நான்கு மனுக்கள்
(iii)    கௌரவ சமிந்த விஜேசிறி                    
(iv)    கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி                    
(v)    கௌரவ குணதிலக ராஜபக்ஷ                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க

ஆயுதப்படைகளின் ஓய்வூதியத்திற்கான சேவைக் காலம் மற்றும் ஓய்வு வயது
 
மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

கனடாவின் ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் இலங்கை மீதான இனப்படுகொலை தீர்மானம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    60 வயதைத் தாண்டியுள்ளவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்

சமூக, பொருளாதார செயற்பாட்டின் முன்னேற்றத்திற்காக தமது உழைப்பை அர்ப்பணித்து, 60 வயதைத் தாண்டிய பின்னர் சமூகத்தில் முறையான அங்கீகாரம் இன்றி செயலிழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முதியவர்களை, சமூகத்தின் முனைப்பான நபர்களாக ஆக்குவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக பாடசாலை சமுதாயம் உள்ளிட்ட முழுச் சமூகத்தையும் விழிப்புணர்வூட்டுகின்ற முறையியலொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
 
•    உள்நாட்டு விதை உற்பத்திச் செயன்முறையினை உயிர்ப்பூட்டுதல்

தற்போது உள்நாட்டு விதை உற்பத்தியானது வெளிநாட்டுக் கம்பெனிகளின் பிடியில் சிக்கியுள்ளமையினாலும், அதன் மூலம் உள்நாட்டு விவசாயத் தொழில்துறைக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமையினாலும், இந்நிலையைத் தடுக்கும் பொருட்டு உள்நாட்டு விதை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    இலங்கையில் உளவியல் ஆலோசகர்களை/உளவியல் சிகிச்சையாளர்களை ஒழுங்குறுத்துதல்

தொழில்வாண்மையல்லாத மற்றும் எதுவிதமான கிளினிக் சார்ந்த பயிற்சியுமில்லாத போலி உளவியல் ஆலோசகர்களும் உளவியல் சிகிச்சையாளர்களும் இலங்கை முழுவதும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து டிப்ளோமா சான்றிதழை மாத்திரம் பெற்றுக்கொண்டு எதுவிதமான கிளினிக் சார்ந்த பயிற்சி அல்லது தொழிற்துறை நெறிமுறைகளுக்கும் இசைவாகாமல் பல்வேறு நிறுவனங்களைத் தாபித்துக்கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலாக தம்மை உளவியல் ஆலோசகர்களாக/ உளவியல் சிகிச்சையாளர்களாக அறிமுகம் செய்து தமது கிளினிக் நிலையங்களுக்கு மக்களை வரவழைக்கும் நிலைமை அதிகரித்துள்ளதாலும், உளவியல் ஆலோசகர்களையும் உளவியல் சிகிச்சையாளர்களையும் மட்டுமன்றி உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை பற்றிய டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பாடநெறிகளையும் முறையான ஒழுங்குறுத்தலுக்கு உட்படுத்துதல், உள-சமூக சேவைகளை அணுகுவதற்குப் பொருத்தமான நடைமுறையை உருவாக்குதல், பாலியல் பன்முகத்தன்மையில் காலங் கடந்த சிகிச்சை முறைகளாகிய பாலின மாற்று சிகிச்சை முறைகளை தடைசெய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இலங்கை வாழ் பிரஜைகளுக்கு முறையான உள-சமூக சுகாதார சேவைகளை அணுகுவதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் வகையில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(ii) காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 45ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 22ஆந் திகதிசெவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom