2022 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-03-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
நாடாளுமன்ற வளாகத்தில் மின் பயன்பாட்டை நிர்வகிப்பது தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ துமிந்த திசாநாயக்க
(iii) கௌரவ அப்துல் ஹலீம்
(iv) கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 2ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-
(i) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ இஷாக் ரஹுமான்
(ii) கௌரவ கபீர் ஹஷீம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பணிகளை தடையின்றி தொடர்தல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தவராஜா கலை அரசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






