2022 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-03-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொசவின் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) (105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 72 ஆம் பிரிவின் கீழ் சுகாதார அமைச்சரால் இலங்கை மருத்துவப் பேரவையின் கலந்தாலோசனையுடன் ஆக்கப்பட்டு 2021 டிசெம்பர் 24 ஆம் திகதிய 2259/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.01.06 முதல் 2022.02.21 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(viii) 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1981 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, 1993 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, 1995 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க மற்றும் 1996 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான (464 ஆம் அத்தியாயமான) காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155 ஆம் மற்றும் 156 ஆம் பிரிவுகளின் கீழ் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 28 ஆம் திகதிய 2251/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07 ஆம் திகதிய 2266/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1981 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, 1993 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, 1995 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க மற்றும் 1996 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான (464 ஆம் அத்தியாயமான) காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155 ஆம் மற்றும் 156 ஆம் பிரிவுகளின் கீழ் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 15 ஆம் திகதிய 2262/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07 ஆம் திகதிய 2266/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 34 ஆம் பிரிவின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு 2022 சனவரி 18 ஆம் திகதிய 2263/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 213ஆ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 செப்தெம்பர் 17 ஆம் திகதிய 2245/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜகத் புஷ்பகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல
(ii) கௌரவ புத்திக பத்திறண
(iii) கௌரவ சமிந்த விஜேசிறி
(iv) கௌரவ எச். நந்தசேன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையிலுள்ள பெண்களின் சமூக பொருளாதார பிரச்சினைகள்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
‘பண்டோரா’ ஆவணங்களின் விசாரணை செயல்முறை
மேற்சொன்ன வினாவிற்கு நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படும் தவறான ஊடக அறிக்கை தொடர்பில் கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல
தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மின் கட்டணங்கள் தொடர்பான ஊடக அறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ கபில அதுகோரள
(ii) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1736 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 09ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






