இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-11 |
|---|
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய நடைமுறையின் கீழ் உரம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
எவ்வாறு வாக்களிப்பது?
சபையின் தீர்ப்பு குறித்த பிரேரணையொன்றிற்கு தேவைப்படுமிடத்து அப்பிரேரணை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக அல்லது நிராகரிப்பிற்காகச் சபைக்கு விடப்படும். ஒவ்வொரு உறுப்பினரினது தீர்ப்பும் வாக்கெடுப்பொன்றின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும். வாக்கெடுப்பானது சபை அமர்வில் உள்ளபோது மட்டுமே நடத்தப்படலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்கிற்கு உரிமையுடையவரென்பதோடு, அவர் அதனைத் தனிப்பட்ட வகையில் பிரயோகிக்கவும் வேண்டும். வாக்களிக்கும்போது, உறுப்பினர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதோடு, விரும்பினால் வாக்களிக்காமலும் விடலாம். பாராளுமன்றத்தில், வாக்கெடுப்பு நான்கு வெவ்வேறு வழிகளில் நடத்தப்படலாம். அவையாவன:
அ. குரல் மூல வாக்கெடுப்பு
குரல் மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். நிலையியற் கட்டளை 47(1) இன்படி, சபாநாயகர் ஒரு விடயத்தைச் சபைக்கு விடும்போது, ஒரு தீர்மானத்திற்குச் சார்பானவர்கள் "ஆம்" என்பர், எதிரானவர்கள் "இல்லை" என்பர். சபையின் கருத்துப் போதுமான அளவிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதெனச் சபாநாயகர் உணருமிடத்து, அவர் அதனைச் சபைக்கு அறிவிக்கலாம். சபாநாயகரின் தீர்ப்பில் ஓர் உறுப்பினர் திருப்தி கொள்ளாதவிடத்து, அவர் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம்.
ஆ. எழுந்து நின்று வாக்களித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47(2) (அ) இல் குறிப்பிடப்பட்டவாறு வாக்கெடுப்பு நடத்தப்படலாம். உறுப்பினர்கள் தமது ஆசனங்களுக்குரிய வரிசைகளிலிருந்து எழுந்து நின்று சபை முன்னே வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பயன்படுத்தமுடியும் என்பதோடு பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அம்முடிவு சபைக்கு அறிவிக்கப்படும்.
இ. இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களித்தல்
உறுப்பினர்கள் சபாநாயகர் அனுமதிக்கும் நேரத்திற்குள் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 47(2) (ஆ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களிக்கும் செயற்பாட்டின் மூலம் தமது வாக்கை பிரகடனப்படுத்தலாம்.
ஈ. பெயர் மூல வாக்கெடுப்பு
பெயர் மூல வாக்கெடுப்பிற்கான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டவிடத்து, நிலையியற் கட்டளை 47 (2) (இ) இல் குறிக்கப்பட்டுள்ளவாறு சபாநாயகர் நடவடிக்கை மேற்கொள்வார். இதன்போது, வாக்கெடுப்பிற்கான மணி ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கப்பட வேண்டுமென்பதோடு, வாக்கெடுப்பு, பெயர் மூலம் நடாத்தப்படுதலும் வேண்டும். செயலாளர் நாயகம், ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை அவர்களிடம் தனித்தனியே கேட்பதன் மூலமும் அதன்படி வாக்குகளைப் பதிவதன் மூலமும் வாக்கெடுப்பை நடத்துவார். செயலாளர் நாயகம் முதலாவதாகப் பிரதம அமைச்சரையும் அதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரிடமும் அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களிடமும் அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் வாக்களிப்பை நடத்துவார். ஓர் உறுப்பினர் தான் வாக்களிக்க மறுப்பதாகக் கூறினால் அது செயலாளர் நாயகத்தினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில், அத்தகைய உறுப்பினரின் பெயர் வாக்களிக்க மறுத்தவராகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அவ்வாகெடுப்பில் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சபைக்கு அறிவிக்கப்படும். வாக்களிப்பு எண்ணிக்கை சமமானதாக இருப்பின் சபாநாயகர் தீர்மான வாக்கொன்றை அளித்ததன் பின்னர், முடிவை அறிவிக்கலாம்.
வாக்களிப்பதன் நோக்கம்
பின்வரும் பல நோக்கங்களுக்காகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு பிரயோகிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தால் சனாதிபதியைத் தெரிவு செய்தல்
சனாதிபதிப் பதவியானது அதன் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னரே காலியாகுமிடத்து, அரசியலமைப்பின் 40ஆம் உறுப்புரையில் விதித்துரைக்கப்பட்டவாறு ஒரு விசேட நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இக்கட்டத்தில் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் ஒருவரைக் காலியான இப்பதவிக்குத் தெரிவு செய்தல் வேண்டும். பதவி காலியான தினத்திலிருந்து ஒரு மாதத்திற்கு மேல் பிந்தாமல் அத்தகைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவதோடு, அளிக்கப்பட்ட வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையோடு அவர் தெரிவு செய்யப்படுதலும் வேண்டும். வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்போது செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாகச் செயற்பட்டு சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரது பெயரையும் அழைத்து அவர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டுக்களை வழங்குவார். தான் யாருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே இருக்கும் சதுரக் கூட்டில் 1 என்னும் இலக்கத்தை உறுப்பினர் குறிக்கலாம். தமது விருப்பத் தெரிவுகளை அவர் தாம் விரும்பியவாறு 2, 3 என்னும் இலக்கங்களை இடுவதன் மூலம் குறித்துக் காட்டலாம்.
"அடுத்துவரும் ஜனாதிபதி" தெரிவு செய்யப்படுவது தொடர்பாக மேலும்
சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோருக்கான தேர்தல்
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதல் பணி மூன்று தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தலாகும். அத்தகைய தேர்தலுக்கு நிலையியற் கட்டளை 4இன் கீழ் விசேட நடைமுறையொன்று விதித்துரைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றமொன்றின் முதலாவது கூட்டத்தில் அல்லது சபாநாயகர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்படுகின்றபோது சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை நிலையியற் கட்டளை 4இன் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருப்பின் அந்தப் பெயர் தெரிவு செய்யப்பட்டதாகச் செயலாளர் நாயகத்தினால் வினாவின்றிப் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நிலையியற் கட்டளை 4(இ) கூறுகிறது. எனினும் சபாநாயகராக ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருப்பின் தேர்தலொன்று நடத்தப்படுதல் வேண்டும். வாக்கெடுப்பிற்கான மணி அடிக்கப்பட்டதும், செயலாளர் நாயகத்தினால் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒவ்வொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட வேண்டுமென்பதோடு, உறுப்பினர்கள் தாம் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவரின் பெயரை வாக்குச் சீட்டில் எழுதுதலும் வேண்டும். வாக்குச் சீட்டில் எழுதப்பட்ட பெயர் தெரியாதவாறு அது மடிக்கப்பட்டு வாக்களிக்கும் உறுப்பினரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.
அதன் பின்னர் வாக்குச் சீட்டுக்கள் சேகரிக்கப்பட்டு செயலாளர் நாயகத்தால் பாராளுமன்றச் சபாபீடத்தில் எண்ணப்படும். முடிவு செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுதல் வேண்டும். பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர் தலைமை தாங்குவதே இவ்விரு தேர்தல்களுக்குமிடையில் உள்ள ஒரே வேறுபாடாகும்.
விசேட பெரும்பான்மை
அரசியலமைப்புத் திருத்தங்கள், அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலங்கள், முதலீட்டு உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு ஒரு விசேட நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இந்தக் கட்டத்தில் விசேட பெரும்பான்மையொன்று (2/3) தேவையென்பதோடு, எதிர்காலத்தில் பார்வையிடுவதற்காக வாக்குகள் விசேடமாகப் பதியப்படுவதை உறுதிப்படுத்துமுகமாகப் பெயர் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் மதிப்பீட்டின்போது மட்டுமல்லாது, மூன்றாம் மதிப்பீட்டின்போதும் இவ்விசேட பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குழு நிலைத் திருத்தம் ஒவ்வொன்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுதல் வேண்டும்.
பிரயோக வாக்கு
வாக்குச் சமநிலை நிலவும்போது சபாநாயகர் அல்லது தலைமைதாங்கும் உத்தியோகத்தர் பிரயோக வாக்கொன்றிற்கு உரிமையுடையவராவார். எனினும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்போது சபாநாயகர் பிரயோக வாக்கைப் பயன்படுத்த முடியாது.
இருபது பேர் பெரும்பான்மையாக வாக்களித்தல்
ஒரு சில பிரேரணைகளை நிறைவேற்றுவதற்குச் சபையின் கூட்ட நடப்பெண் (20) தேவையாகும். யாதேனும் விசேட அலுவலைப் பரிசீலிக்கும் அல்லது முடிவுறுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அறிவித்தலின் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களினால் ஏதேனும் கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் பிரேரணையொன்றையடுத்து, யாதேனும் ஒரு நிலையியற் கட்டளை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலையியற் கட்டளைகள் இடை நிறுத்தப்படலாமென நிலையியற் கட்டளை 138 ஏற்பாடு செய்கின்றது. எனினும் இவ்வொழுங்கிலான பிரேரணையொன்று அமைச்சரவை அமைச்சர் ஒருவரினால் பிரேரிக்கப்படாதவிடத்து, வாக்கெடுப்பொன்றின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதோடு, அத்தீர்மானத்திற்குச் சார்பாக இருபதுக்குக் குறைவான உறுப்பினர்களே வாக்களித்ததாகக் காணப்படின் அது தோற்றதாக அறிவிக்கப்படுதலும் வேண்டும்.
ஒத்திவைப்புப் பிரேரணைகள்
அறிமுகம்
பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல்
பாராளுமன்றம் அடுத்துறு அமர்வு தினம் வரை ஒத்திவைக்கப்படும்.
எனினும், 48 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படுகையில், பிரதம அமைச்சர் சபாநாயகரை வேண்டிக்கொள்வதன் மீது பாராளுமன்றத்தை ஒத்திவைக்க இயலும்.
நாளொன்றுக்கான பிரதான அலுவல்கள் முடிவுற்றதும் பாராளுமன்றம் அடுத்துறு தினத்திற்கு ஒத்திவைக்க முன்னர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை விவாதிப்பதற்கு அரை மணித்தியால நேரம் ஒதுக்கப்படுகிறது.
ஒத்திவைப்புப் பிரேரணைகளின் வகைகள்
| அ. | அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான விவாதம் (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19 ஐப் பார்க்க.) |
| ஆ. | சபையின் பிரதான அலுவல்கள் முடிவுற்ற பின்னர் “சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை” களுக்காக அரை மணித்தியாலத்தை ஒதுக்குதல். (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 20 ஐப் பார்க்க.) |
| இ. | பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய சமர்ப்பிக்க முடியுமான பிரேரணைகள். |
ஒத்திவைப்புப் பிரேரணைகள்
(பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19)
இத்தகைய ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் சபாநாயகரின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எழுத்துமூலமான அறிவித்தலொன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில், 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து அத்தகைய வேண்டுகோளுக்கு ஒத்திசைவு வழங்குவதன் மீது அத்தகைய பிரேரணையைச் சமர்ப்பிக்க முடியும்.
அவ்வாறு அனுமதி பெற்ற பிரேரணையொன்றை பி.ப. 5.00 மணிக்கு சமர்ப்பிக்க முடியும். ஏதேனும் தினமொன்றில் அத்தகைய பிரேரணை ஒன்றுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க இடமளிக்கப்படும்.
மேலும், சபாநாயகர் இணக்கந் தொிவிக்க நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில், அப்பிரேரணையில் அனுமதி வழங்கப்பட்ட பிரிவை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசிப்பதற்கு இடமளிக்கப்படும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை சபாநாயகர் சபையில் எடுத்தியம்புதல் வேண்டும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்















