இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

2025-09-18
1
இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர். IMF - நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் கௌரவத் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.  செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை-மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர். தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs) காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடரிப்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.  கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
2025-09-12 2026 வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 7...
2025-09-12 பிலியந்தலை மத்திய கல்லூரி...
மேலும்

2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-11
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
2025-09-09 2025 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை...
2025-08-22 2025 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை...
2025-08-21 2025 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

பாராளுமன்ற அமர்வு நாட்களும் நேரங்களும்

பாராளுமன்ற அமர்வு நாட்கள்

 

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8(1) இல் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்தாலன்றி, ஒரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களிலும் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். அத்தகைய முதலாவது மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும்.

 

ஆயினும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 75 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றம் இருபத்தாறு நாட்கள் கூட வேண்டும். எனினும், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அங்கீகாரத்திற்கு அமைய இவ்வொதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.

 

பாராளுமன்ற அமர்வு நேரங்கள்

 

பாராளுமன்றத்தில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, 2023 ஆகஸ்ட் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நேரங்கள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 12.30 வரையும் பி.ப. 1.00 முதல் 5.30 வரையுமாகும்.

மேற்சொன்ன வண்ணம் பாராளுமன்றம் பின்வருமாறு கூடுகின்றது:-

(செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)

மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 முதல் பி.ப. 12.30 சபையின் பிரதான அலுவல்கள்
பி.ப. 1.00 முதல் பி.ப. 5.00
பி.ப. 5.00 முதல் பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (2 வினாக்கள்)/ ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 முதல் பி.ப. 01.00)

 

ஒவ்வொரு மாதத்தினதும் முதல் அமர்வு வாரத்தில் புதன்கிழமை நாட்களில், பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்தில் அரை மணித்தியாலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன வண்ணம், வினா மணித்தியாலம் பின்வருமாறு அமைகிறது:-

 

புதன்கிழமைகளில் 

மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (4 வினாக்கள்)
மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)

பாராளுமன்ற விவாதங்களுக்கான விதிகள்

விதிகளின் முக்கியத்துவம் என்ன?

பாராளுமன்றத்தின் முறையான செயற்பாடுகளுக்கு வகைசெய்யும் முகமாக விதிகளும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன.இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சபையில் விவாதங்களின் தரத்தை உயர்த்த முடியும். சட்டங்களை நிறைவேற்றுவதிலும்,வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதிலும் ஏனைய விடயங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதங்களில் பங்குபற்ற வேண்டியிருக்கின்றது. பாராளுமன்ற முறைமையில், சபையில் எல்லா நோக்குகளும் கருத்துக்களும் எண்ணங்களும் கருத்துப் படிவங்களும் ஓர் ஒழுங்குக் கிரமத்தில் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முடிவுகள் எட்டப்படுகின்றன.


பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

பேசும் உறுப்பினர் எப்போதும் சபாநாயகரையே விளிக்க வேண்டும். அவர் பேசும்போது எழுந்து நிற்க வேண்டும். உறுப்பினர்கள், தொடர்பற்ற விடயங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூறியது கூறலில் ஈடுபடக்கூடாது என அவர்கள் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்கள் முறையற்ற நோக்கங்களை மற்ற உறுப்பினர்கள் மீது சாட்டக்கூடாது. நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களைப் பற்றியும் பேசக்கூடாது. எந்தப் பிரேரணை மீதும் அல்லது சட்டமூலம் மீதும் பிரேரணை பிரேரித்தவரைத் தவிர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், சபையின் குழுநிலையில் ஓர் உறுப்பினர் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படலாம். அத்துடன் பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் சபையில் அதற்கான பிரேரணை இல்லாதவிடத்தும் தனிப்பட்ட விளக்கத்தைச் செய்ய உரித்துடையவராயிருக்கிறார். ஆனாலும் இந்த விளக்கங்களிலே விவாதங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாராளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பாவியாது இருப்பதற்கு உறுப்பினர்கள் விசேட கவனம் எடுக்க வேண்டும்.டும்.


உரையாற்றாத உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

உறுப்பினர்கள் கண்ணியமான முறையில் சபையில் பிரவேசிப்பதுடன், அவசியமில்லாமல் சபையைக் கடக்கவும் கூடாது. சபையின் உள்ளே புதினப் பத்திரிகைகள், புத்தகங்கள், கடிதங்கள் என்பனவற்றை வாசிக்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமைதியாக இருப்பதுடன் சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் வழிவிட்டாலொழிய அவரைக் குழப்பவும் கூடாது. சபையில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை விளக்கிக் காட்டப் பல்வேறு பொருட்களையும் கொண்டு வர முடியாது. கையடக்கத் தொலைபேசிகளும் ஒலிப்பதிவு உபகரணங்களும் சபையினுள் அனுமதிக்கப்படமாட்டா.


விவாதங்கள் தொடர்பான சபாநாயகரின் அதிகாரங்கள் யாவை?

இழிவாான அல்லது வெறுக்கத்தக்க குறிப்புக்களை வாபஸ் பெறுமாறு உறுப்பினரை சபாநாயகர் கேட்கலாம். விரும்பத்தகாத சொற்களை அதிகாரபூர்வப் பதிவுகளிலிருந்து (ஹன்சாட்) நீக்கவும் சபாநாயகரால் முடியும். சபை நடவடிக்கைகளைக் குழப்புவதில் அல்லது தடையேற்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபடும் உறுப்பினரை அவர் எச்சரிக்கலாம். குழப்பும் உறுப்பினரை சபையிலிருந்து அகற்றும்படி படைக்கலச் சேவிதரைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது பெயர் குறிப்பிடலாம். ஓர் உறுப்பினர் சில வாரங்களுக்குச் சபையிலிருந்து தடுத்து வைக்கப்படலாம். ஓர் உறுப்பினருடைய நடத்தை முற்றும் ஒழுங்கீனமானதாக இருந்தால் சபாநாயகர் அவரை நாளின் மிகுதியான அமர்வில் பங்குபற்றாது தடை செய்து பாராளுமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டளையிடலாம்.


உரையாற்றுவோரின் நிரலைத் தயாரிப்பவர் யார்?

அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி முதற்கோலாசான்களே உரையாற்றுவோரின் நிரல்களைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். இந்த நிரல்கள் முன்னதாகவே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுச் சபாநாயகர் அந்த உறுப்பினர்களைச் சபையில் பேசும்படி அழைப்பார்.


ஒழுங்குப் பிரச்சினைகள் என்றால் என்ன?

சபை நடவடிக்கைகளில் ஒழுங்கு மீறப்பட்டதாக ஓர் உறுப்பினர் உணர்ந்தால், அவ்விடயத்தை அவர் அவ்வப்போது எழுப்ப முடியும். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்படும்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் அவருக்கு இடமளிக்க வேண்டும். சபாநாயகரோ தலைமைதாங்கும் உறுப்பினரோ தன் முடிவை அறிவித்த பின்னர் உறுப்பினர் தமது பேச்சை மீண்டும் ஆரம்பிக்கலாம்.


வாக்கெடுப்புக்குப் பின்னர் ஓர் உறுப்பினர் பேச முடியுமா?

விவாதத்தின் இறுதியிலே உறுப்பினர்கள் தங்கள் சம்மதத்தை அல்லது எதிர்ப்பை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஓர் உறுப்பினர் வாய்மூலம் முடிவு தெரிவிப்பில் திருப்தி கொள்ளாது விடின் வாக்கெடுப்பைக் கோரலாம். வாக்கெடுப்பானது நிரை நிரையாக சார்பானவர்களையும் எதிரானவர்களையும் எண்ணுவதன் மூலமோ அல்லது அவர்களின் பெயர்களை அழைத்து அவர்களின் விருப்பைப் பதிவு செய்வதன் மூலமோ நடாத்தப்படலாம். எந்த வழியில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பது சபாநாயகரைப் பொறுத்தது.


கூட்ட நடப்பெண் என்றால் என்ன?

கூட்ட நடப்பெண்ணானது தலைமைதாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். கூட்ட நடப்பெண் காணப்படாத சமயத்தில், இந்த விடயம் தலைமைதாங்கும் உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் அழைப்பு மணி ஒலிக்கச் செய்து, பின்பு ஐந்து நிமிடங்களின் முடிவிலும் கூட்ட நடப்பெண் காணப்படாத பட்சத்தில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பார்.


எவ்வாறு வாக்களிப்பது?

சபையின் தீர்ப்பு குறித்த பிரேரணையொன்றிற்கு தேவைப்படுமிடத்து அப்பிரேரணை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக அல்லது நிராகரிப்பிற்காகச் சபைக்கு விடப்படும். ஒவ்வொரு உறுப்பினரினது தீர்ப்பும் வாக்கெடுப்பொன்றின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும். வாக்கெடுப்பானது சபை அமர்வில் உள்ளபோது மட்டுமே நடத்தப்படலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்கிற்கு உரிமையுடையவரென்பதோடு, அவர் அதனைத் தனிப்பட்ட வகையில் பிரயோகிக்கவும் வேண்டும். வாக்களிக்கும்போது, உறுப்பினர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதோடு, விரும்பினால் வாக்களிக்காமலும் விடலாம். பாராளுமன்றத்தில், வாக்கெடுப்பு நான்கு வெவ்வேறு வழிகளில் நடத்தப்படலாம். அவையாவன:

அ. குரல் மூல வாக்கெடுப்பு

குரல் மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். நிலையியற் கட்டளை 47(1) இன்படி, சபாநாயகர் ஒரு விடயத்தைச் சபைக்கு விடும்போது, ஒரு தீர்மானத்திற்குச் சார்பானவர்கள் "ஆம்" என்பர், எதிரானவர்கள் "இல்லை" என்பர். சபையின் கருத்துப் போதுமான அளவிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதெனச் சபாநாயகர் உணருமிடத்து, அவர் அதனைச் சபைக்கு அறிவிக்கலாம். சபாநாயகரின் தீர்ப்பில் ஓர் உறுப்பினர் திருப்தி கொள்ளாதவிடத்து, அவர் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம்.

ஆ. எழுந்து நின்று வாக்களித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47(2) (அ) இல் குறிப்பிடப்பட்டவாறு வாக்கெடுப்பு நடத்தப்படலாம். உறுப்பினர்கள் தமது ஆசனங்களுக்குரிய வரிசைகளிலிருந்து எழுந்து நின்று சபை முன்னே வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பயன்படுத்தமுடியும் என்பதோடு பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அம்முடிவு சபைக்கு அறிவிக்கப்படும்.

இ. இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களித்தல்

உறுப்பினர்கள் சபாநாயகர் அனுமதிக்கும் நேரத்திற்குள் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 47(2) (ஆ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களிக்கும் செயற்பாட்டின் மூலம் தமது வாக்கை பிரகடனப்படுத்தலாம்.

ஈ. பெயர் மூல வாக்கெடுப்பு

பெயர் மூல வாக்கெடுப்பிற்கான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டவிடத்து, நிலையியற் கட்டளை 47 (2) (இ) இல் குறிக்கப்பட்டுள்ளவாறு சபாநாயகர் நடவடிக்கை மேற்கொள்வார். இதன்போது, வாக்கெடுப்பிற்கான மணி ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கப்பட வேண்டுமென்பதோடு, வாக்கெடுப்பு, பெயர் மூலம் நடாத்தப்படுதலும் வேண்டும். செயலாளர் நாயகம், ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை அவர்களிடம் தனித்தனியே கேட்பதன் மூலமும் அதன்படி வாக்குகளைப் பதிவதன் மூலமும் வாக்கெடுப்பை நடத்துவார். செயலாளர் நாயகம் முதலாவதாகப் பிரதம அமைச்சரையும் அதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரிடமும் அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களிடமும் அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் வாக்களிப்பை நடத்துவார். ஓர் உறுப்பினர் தான் வாக்களிக்க மறுப்பதாகக் கூறினால் அது செயலாளர் நாயகத்தினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில், அத்தகைய உறுப்பினரின் பெயர் வாக்களிக்க மறுத்தவராகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அவ்வாகெடுப்பில் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சபைக்கு அறிவிக்கப்படும். வாக்களிப்பு எண்ணிக்கை சமமானதாக இருப்பின் சபாநாயகர் தீர்மான வாக்கொன்றை அளித்ததன் பின்னர், முடிவை அறிவிக்கலாம்.

 
மேலும், சபாநாயகர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கும் முன்னர், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 49 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பின்போது ஏற்பட்ட பிழையை திருத்துமாறு கோரலாம்.
 
அதேபோல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 48 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வாக்கெடுப்பில் குழப்பகரமான நிலைமை அல்லது பிழையொன்று ஏற்படுமிடத்து, மீள்வாக்கெடுப்பிற்காக சபாநாயகர் பாராளுமன்றத்தை நெறிப்படுத்தலாம்.

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom