01

E   |   සි   |  

சமீபத்திய செய்திகள்

ஜனவரி 07, 2026

அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி  என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டனகொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் குறித்து ஆராயும்போது  அதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் புதிதாக நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்புக்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு நிலைமாற்று காலமாக 3 வருடங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் குறிப்பாக புதிய அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கான வருமான வரி விலக்களிப்பை நீக்கும் அதேவேளை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலைமாற்று காலத்தை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து குழு விளக்கம் கோரியது.அத்துடன், முதலீட்டாளர்களின் முன்கூட்டிய செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பதிவுச்சான்றிதழொன்று வழங்கப்படும்வரை விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள், திருத்தப்பட்ட கட்டமைப்பு போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்ற உத்தரவாதம் என்பன குறித்தும் குழு ஆராய்ந்தது.அத்துடன், 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கும் வகையில் வெளிநாட்டுச் செலாவணி அமைவது குறித்துக் கேள்வியெழுப்பிய குழு, இலங்கை ரூபாயினால் ஈட்டப்படும் வருமானம், நாணய மாற்று மற்றும் தேசிய நாணய, நிதி ஒழுங்குவிதிகளுக்கு அமைய தொடர்ச்சியாக அவை பேணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. துறைமுக நகரத்தில் கடல்கடந்த வங்கிச் செயல்பாடுகளுக்கும் உள்நாட்டு வங்கிச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் குழு கவனம் செலுத்தியது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மூலதனம், பணப்புழக்கம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட மத்திய வங்கியின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை செய்யும் அதன் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.துறைமுக நகரத்திற்குள் உள்ள அளவுகோல்களை பின்பற்றாதது, தொடர்புடைய அபராதங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் துறைமுக நகரத்தின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க கண்காணிப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இந்தத் திருத்தங்கள் துறைமுக நகர கட்டமைப்பை செயல்படுத்துதல், புதிய வணிக நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களை செயல்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச உறுதிப்பாடுகளுடன் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி  குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் அல்லது ஏதேனும் அரச நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டு, சரியான நேரத்தில் மற்றும் வினைத்திறனான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.போதிய சட்ட ஏற்பாடுகள் காணப்படும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிதியை உருவாக்கத் தவறியமை குறித்தும் குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மேலும் தாமதங்களினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, "“Rebuilding Sri Lanka Fund” நிதியத்தை சட்டப்பூர்வ நிதியமாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்தியது. அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியது.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுனில் ராஜபக்ஷ, அஜித் அகலகட மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனவரி 06, 2026

பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டன. கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 05) கூடிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களும் கலந்துகொண்டார்.சேற்று நண்டின் மேலோட்டின் மிகப்பரந்த பாகத்தில் அளவிடப்பட்ட 130 மில்லிமீற்றருக்கு குறைவான மேலோட்டு அகலத்தைக் கொண்ட  சேற்று நண்டுகளைப் பிடித்தலோ, விற்பனை செய்தலோ, உடமையில் வைத்திருத்தலோ, பதனிடுதலோ அல்லது ஏற்றுமதி செய்தலோ கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியினால் தடைசெய்யப்படுகின்றது.  மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இதனை மதிப்பாய்வு செய்து ஒழுங்குவிதியைத் திருத்துவது என்ற அடிப்படையில் இதனை சமர்ப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், மீனவர்களின் பங்களிப்புடனான ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் என்றும், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து மீன்பிடி அமைச்சு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் அதிகமான மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக கௌரவ பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகளைத் தடுப்பது உள்ளிட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜனவரி 05, 2026

புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

2026 புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 05) முற்பகல் இடம்பெற்றது.பாராளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வை, பெலவத்த மயுரபாத பிரிவென் விஹாரையின் சத்தர்ம கீர்தி ஸ்ரீ விசித்ர தர்ம கதிக பூகெந்தயாயே குணரதன தேரர் நடாத்தினர். பாராளுமன்ற குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்களும், இணைந்த சேவைகளின் பணியாளர்களும், இலங்கை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனவரி 01, 2026

பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகரின் தலைமையில்

அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளை உச்ச வகையில் பாதுகாப்பதாகவும், அதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கெரளவ சபாநாயகர் வலியுறுத்தினார்பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாாடுகள் உள்ளிட்ட விடயங்களுக்காக  வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்கு வசதிகளை வழங்குவது உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் பணியாட் தொகுதியினர் வழங்கிவரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்புபாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதனால் பத்தாவது பாராளுமன்றத்திற்கு விசேடமான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தினார். இதற்கு அமைய, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்றப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இது விடயத்தில் சாதகமான முன்னேற்றங்களைக் காண முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சமூக மேம்பாடு ஏற்படும்போது நியாயம் மற்றும் சமத்துவம் பாராளுமன்றத்தில் உள்ள சகல பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தனது உரையில் தெரிவித்தார். இதற்கு அமைய, பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளடங்கலான சகல உழைக்கும் மக்களினதும் உரிமைகளை அதியுச்ச அளவில் பாதுகாப்பதற்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தான் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் ஊழியர்களாக மாறுவதற்கு புத்தாண்டில் தைரியம் கிடைக்க  வேண்டும் எனக் கூறி சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடு என்ற ரீதியில் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிச் செல்லும்போது சட்டவாக்கம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு விசாலமானது எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடவடிக்கைகள் மற்றும் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியைத் தெரிவித்த அவர், புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்ற பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியினர் உள்ளிட்ட அனைவரும் அரசாங்க ஊழியர்களுக்கான உறுதியுரையை எடுத்துக்கொண்டனர்.கௌரவ பிரதிச் சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளடங்கலான பாராளுமன்ற பணியாளர்கள், இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சபை அலுவல்கள்

அனைத்தும்  

ஜன.

08

பாராளுமன்ற நாட்காட்டி

அமர்வு நாட்கள்

முழு நாட்காட்டி

செய்திமடல்களுக்கு பதிவு செய்யவும்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks