சபாநாயகர்கள்
| முதலாவது அரசுப் பேரவை | 1931 – 1935 |
| கௌரவ ஏ. எஃப் மொலமுறே (டெடிகம) |
07 ஜூலை 1931 – 10 டிசம்பர் 1934 |
| (திரு. ஏ. எஃப் மொலமுறே, இலங்கையின் முதலாவது சபா நாயகராவார்)) | |
| கௌரவ எஃப். ஏ. ஒபேசேக்கர (அவிசாவளை) |
11 டிசம்பர் 1934 - 07 டிசம்பர் 1935 |
| (திரு. மொலமுறேயின் இராஜினாமாவையடுத்து கௌரவ எஃப். ஏ. ஒபேசேக்கர சபாநாயகராகத் தெரிவு செய்யப் பட்டார்) | |
| இரண்டாவது அரசுப் பேரவை | 1936 – 1947 |
| கௌரவ சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி (ஊர்காவற்றுறை) |
17 மார்ச் 1936 - 04 ஜூலை 1947 |
| முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) |
1947 – 1952 |
| கௌரவ சேர் பிரான்சிஸ் மொலமுறே (பலாங்கொடை) |
14 ஒக்டொபர் 1947 – 25 ஜனவரி 1951 |
| கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ் (நாத்தாண்டி) |
13 பெப்ரவரி 1951 – 08 ஏப்ரில் 1952 |
| ( சேர் பிரான்சிஸ் மொலமுறேயின் இறப்பினையடுத்து திரு. பீரிஸ் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) |
1952 - 1956 |
| கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ் (நாத்தாண்டி) |
09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956 |
| மூன்றாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) | 1956 - 1959 |
| கௌரவ எச். எஸ். இஸ்மாயில் (புத்தளம்) |
19 ஏப்ரில் 1956 - 05 டிசம்பர் 1959 |
| நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | மார்ச் - ஏப்ரல் 1960 |
| கௌரவ ரி. பீ. சுபசிங்க (கட்டுகம்பளை) |
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960 |
| ( திரு. சுபசிங்க எதிர்க்கட்சியின் பெரும்பான்மை வாக்குகளினால் சிறுபான்மை அரசாங்கத்தின் வேட்பாளரான சேர் அல்பேட் எஃப் பீரிஸைத் தோற்கடித்தார்) | |
| ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1960 - 1964 |
| கௌரவ ஆர். எஸ். பெல்பொல (நாவலப்பிட்டி) |
05 ஆகஸ்ட் 1960 - 24 ஜனவரி 1964 |
| கௌரவ ஹியூ பர்னாந்து (வென்னப்புவ) |
24 ஜனவரி 1964 - 17 டிசம்பர் 1964 |
| (திரு. பெல்பொலவின் இராஜினாமாவையடுத்து திரு. பர்னாந்து சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1965 - 1970 |
| கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ் (நாத்தாண்டி) |
05 ஏப்ரில் 1965 - 21 செப்டெம்பர் 1967 |
| கௌரவ சேர்லி கொரயா (சிலாபம்) |
27 செப்டெம்பர் 1967 - 25 மார்ச் 1970 |
| (சேர் அல்பேட் பீரிஸின் இறப்பையடுத்து திரு. கொரயா சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1970 - 1972 |
| கௌரவ ஸ்ரான்லி திலகரத்ன (கோட்டே) |
07 ஜூன் 1970 - 22 மே 1972 |
| முதலாவது தேசிய அரசப் பேரவை | 1972 - 1977 |
| கௌரவ ஸ்ரான்லி திலகரத்ன (கோட்டே) |
22 மே 1972 - 18 மே 1977 |
| இரண்டாவது தேசிய அரசப் பேரவை | 1977 - 1978 |
| கௌரவ கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் (கோட்டே) |
04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் முதலாவது பாராளுமன்றம் | 1978 - 1988 |
| கௌரவ கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் (கோட்டே) |
07 செப்டெம்பர் 1978 - 13 செப்டெம்பர் 1978 |
| கௌரவ எம். ஏ. பாக்கீர் மாக்கர் (பேருவளை – முதலாவது உறுப்பினர்) |
21 செப்டெம்பர் 1978 - 30 ஆகஸ்ட் 1983 |
| ( கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் அவர்களின் இராஜினாமாவையடுத்து திரு. பாக்கீர் மாக்கார் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| கௌரவ ஈ. எல். சேனநாயக்க (மஹநுவர) |
06 செப்டெம்பர் 1983 - 20 டிசம்பர் 1988 |
| (திரு. பாக்கீர் மாக்காரின் இராஜினாமாவையடுத்து திரு. சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| இலங்கைச் ச. சோ. கு. இன் இரண்டாவது பாராளுமன்றம் | 1989 - 1994 |
| கௌரவ எம். எச். மொஹமட் (கொழும்பு மாவட்டம்) |
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் மூன்றாவது பாராளுமன்றம் | 1994 - 2000 |
| கௌரவ கே. பீ. ரத்நாயக்க (தேசிய பட்டியல்) | 25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000 14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் நான்காவது பாராளுமன்றம் | 2000 - 2001 |
| கௌரவ அநுர பண்டாரநாயக்க (கம்பஹா மாவட்டம்) |
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001 |
| (சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் எதிர்க்கட்சி பா. உ.) | |
| இலங்கைச் ச. சோ. கு. இன் ஐந்தாவது பாராளுமன்றம் | 2001 - 2004 |
| கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா (கம்பஹா மாவட்டம்) |
19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் ஆறாவது பாராளுமன்றம் | 2004 - 2010 |
| கௌரவ டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார (பதுளை மாவட்டம்) |
22 ஏப்ரில் 2004 - 09 பெப்ரவரி 2010 09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010 |
| (ஐ. தே. மு யைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஐ. ம. சு. மு. வேட்பாளரான டி. யூ. டப்ளியூ. குணசேக்கர பெற்ற 109 வாக்குகளுக்கெதிரான 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்) | |
| இலங்கைச் ச. சோ. கு. இன் ஏழாவது பாராளுமன்றம் | 2010 - 2015 |
| கௌரவ சமல் ராஜபக்ஷ (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) |
22 ஏப்ரில் 2010 - 26 ஜுன் 2015 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் எட்டாவது பாராளுமன்றம் | 2015 - 2020 |
| கௌரவ கரு ஜயசூரிய (தேசிய பட்டியல்) |
01 செப்டெம்பர் 2015 - 02 மார்ச் 2020 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் ஒன்பதாவது பாராளுமன்றம் | 2020 - 2024 |
| கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (மாத்தறை) |
2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டெம்பர் 24 |
| இலங்கைச் ச. சோ. கு. இன் பத்தாவது பாராளுமன்றம் | 2024 - இன்று வரை |
| கௌரவ அசோக சபுமல் ரன்வல (கம்பஹ) |
2024 நவம்பர் 21 - 2024 டிசம்பர் 13 |
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன (பொலன்னறுவை) |
2024 டிசம்பர் 17 - இன்று வரை |
| (திரு. ரன்வல அவர்கள் இராஜினமா செய்ததன் காரணமாக திரு. விக்கிரமரத்ன அவர்கள் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்) | |
අවසන් යාවත්කාලීන කිරීම 2024-12-17
ක්ෂණික සබැඳි
-

පාර්ලිමේන්තු දිනදසුන -

පනත් සහ පනත් කෙටුම්පත් -

කාරක සභා -

ආණ්ඩුක්රම ව්යවස්ථාව -

පාර්ලිමේන්තුව සජීවීව -

කාරක සභා සජීවීව - පටිගත කළ -

ඡායාරූප ගැලරිය -

පුවත් -

බාගත කිරීම් -

තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම -

තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම - කථානායක කාර්යාලය -

අයවැය 2026 -

නව වෙබ් අඩවිය (BETA අනුවාදය) -

ජාතික පොලිස් කොමිෂන් සභාවේ සාමාජික ධුරයට පත්කිරීම






