இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 மார்ச் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-03-03

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX ஆம் பகுதியையும்;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIX ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVII ஆம் பகுதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வசந்த பியதிஸ்ஸ                   
(ii)    கௌரவ உபுல் கித்சிறி - மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ சுதத் பலகல்ல                   
(iv)    கௌரவ ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையின் குறிக்கோள்களை நிறைவேற்றுதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1817 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 4ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom