இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 பெப்ரவரி 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-21

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை
2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டி.வீ. சானக                    
(ii)    கௌரவ ஹெக்டர் அப்புஹாமி                    
(iii)    கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி    
(iv)    கௌரவ அசோக குணசேன  - இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ நந்தன பத்மகுமார   - எட்டு மனுக்கள்
(vi)    கௌரவ ருவன் மாபலகம -  பதின்மூன்று மனுக்கள்
(vii)    கௌரவ கஞ்சன வெலிப்பிட்டிய - இரண்டு மனுக்கள்
(viii)    கௌரவ தேவானந்த சுரவீர - ஏழு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

நிதி கையிருப்பு, வெளிநாட்டுக் கடன் போன்ற விபரங்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று

சமீபத்திய குற்றச் செயல்கள் மற்றும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2025) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட நான்காம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புகையிரதங்களில் மோதும் காட்டு யானைகளின் இறப்புகளுக்கான தீர்வுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுசந்த குமார நவரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1842 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 22ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom