2025 பெப்ரவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-02-19 |
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : குழு பிரதிநிதித்துவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரேரணைகள் தொடர்பான தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஆண்டறிக்கையும் கணக்குகள் கூற்றும்.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை.
(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜே.சீ. அலவத்துவல - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ இம்ரான் மகரூப் - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ அமில பிரசாத்
(iv) கௌரவ நந்த பண்டார - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல
(vi) கௌரவ (திருமதி) தீப்தி வாசலகே
(vii) கௌரவ தர்மப்ரிய விஜேசிங்ஹ - ஆறு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
வறுமைக்கான தேர்வு அளவுகோல்கள், அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் ஏற்றுமதியாளர்களைப் பாதுகாத்தல் போன்றவை.
மேற்சொன்ன வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






