2025 பெப்ரவரி 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-02-18 |
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரத்ன கமகே - பன்னிரண்டு மனுக்கள்
(ii) கௌரவ முனீர் முலாபர்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி - பன்னிரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அஜித் அகலகட
(v) கௌரவ அஜந்த கம்மெத்தெகே
(vi) கௌரவ ஜகத் மனுவர்ண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கான காரணம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தெஹிவளையிலுள்ள மீலாத் வித்தியாலயத்திற்கு பயன்படுத்தப்படாத கட்டிடமொன்றை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1826 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






