இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 பெப்ரவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-05

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIX ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVI மற்றும் XLVII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும்

(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட  தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவின் கீழ்.
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையின் மூன்றாவது அறிக்கை.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.11.27 முதல் 2024.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(ii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதித் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 நவம்பர் 29 ஆம் திகதிய 2412/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(v)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை.
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆண்டறிக்கை.
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை.
(ix)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(x)    2016 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க     -    மூன்று மனுக்கள்                    
(ii)    கௌரவ ஹர்ஷன ராஜகருணா  -    மூன்று மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ரீ.கே. ஜயசுந்தர
(ii)    கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க
(iii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(iv)    கௌரவ ரவி கருணாநாயக்க


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா 

பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழியில் தன்னை தடுக்கின்ற காவல்துறையினர்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“தேசிய சுகாதாரக் கொள்கை மூலம் சுகாதாரத் துறை பிரச்சினைகளைத் தீர்ப்பது” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ருவன் விஜேவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 6ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom