இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 ஜனவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-01-24

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) பாராளுமன்ற அலுவல்கள்

2024 டிசம்பர் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 ஆனது, 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுமாக.

(ii) பாராளுமன்ற அலுவல்கள்

2024 டிசம்பர் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 50(2) இன் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்ட “துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு” என்ற சொற்களுக்குப் பதிலாக “அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு” என்ற சொற்களை பதிலீடுசெய்வதன் மூலம் அந்த நிலையியற் கட்டளை 2025 பெப்ரவரி 14 ஆம் திகதிவரை தொழிற்படுமாக.

(iii) பாராளுமன்ற அலுவல்கள்

2024 டிசம்பர் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு அரசியலமைப்பின் 152 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்ட சட்டமூலங்கள் தவிர குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும் ஏதேனும் சட்டமூலம், பொருத்தனை, குழுவின் விடயப்பரப்பெல்லையினுள் வரும் வருடாந்த அறிக்கை மற்றும்  செயலாற்று அறிக்கை உட்பட அல்லது  ஏதேனும் குழு அல்லது அமைச்சரொருவர், எவ்விடயம் அல்லது தமது நியாயாதிக்கத்திற்குள்ளான விடயங்களும் பணிகளும் தொடர்பான வேறேதேனும் கருமமொன்றை 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை பரிசோதனை செய்வதற்கும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும்  தத்துவமளிக்கப்படுமாக.


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i)    மறைந்த கௌரவ ருக்மன் சேனாநாயக்க
(ii)    மறைந்த கௌரவ ஏ.ஏ. ரெஜினோல்ட் பெரேரா
(iii)    மறைந்த கௌரவ சிறினால் டி மெல்
(iv)    மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ்


அதனையடுத்து, 1256 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 05ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom