இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 ஜனவரி 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-01-21

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 டிசம்பர் 19 ஆம் திகதிய 2415/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 டிசெம்பர் 18 ஆம் திகதிய 2415/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 டிசெம்பர் 24 ஆம் திகதிய 2416/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், எஸ்எல்ரி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியலில் விஞ்ஞான முதுமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிய 2373/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலொஜி (பிறைவேட் லிமிட்டெட்) நிறுவனத்தினால் வழங்கப்படும் தரவு விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான இளமாணி மற்றும் சினெக் கெம்பஸ் (பிறைவேட் லிமிட்டெட்) நிறுவனத்தினால் வழங்கப்படும் விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் கௌரவ கல்வி இளமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மார்ச் 12 ஆம் திகதிய 2375/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.
(vii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், KIU கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தரவு விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான இளமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 08 ஆம் திகதிய 2379/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் (ஐசீஏஎஸ்எல்) வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 03 ஆம் திகதிய 2382/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸினஸ் மெனேஜ்மன்ட் லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வி முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தில் கல்வி முதுமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 08 ஆம் திகதிய 2383/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், இன்டர்நஷனல் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலொஜி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 11 ஆம் திகதிய 2383/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆங்கில கற்கைகளில் இளங்கலைமாணி சிறப்பு தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 16 ஆம் திகதிய 2384/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்டர்நஷனல் புடிஸ்ட் அகடமியினால் (SIBA) வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தொலைத்தொடர்பில் தொழில்நுட்பவியல் இளமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 16 ஆம் திகதிய 2384/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் சட்டமாணி சிறப்பு தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூன் 10 ஆம் திகதிய 2388/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்டர்நஷனல் புடிஸ்ட் அகடமியினால் (SIBA) வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூன் 20 ஆம் திகதிய 2389/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பிரிட்டிஷ் ஸ்கூல் ஒப் கொமர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் வணிக முகாமைத்துவ இளமாணி சிறப்பு தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூன் 20 ஆம் திகதிய 2389/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸினஸ் மெனேஜ்மன்ட் லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 11 ஆம் திகதிய 2392/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் முன்பிள்ளைப்பருவ கல்வியில் சிறப்புக் கல்வி இளமாணி தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 செப்டெம்பர் 25 ஆம் திகதிய 2403/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xviii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை.
(xix)    2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, புலமைச் சொத்துச் சட்டத்தின் 160அ, 161ஆ, 161இ, 161ஈ, 161உ, 161ஊ, 161எ, 161ஐ, 161ஒ மற்றும் 161 ஔ ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 204 ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 22 ஆம் திகதிய 2407/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xx)    2022 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆண்டறிக்கை.
(xxi)    2022 ஆம் ஆண்டுக்கான ஜி. எஸ். எம். பி. டெக்னிகள் சர்விசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(xxii)    2023 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சிவஞானம் சிறீதரன்

தான் ஒரு மாநாட்டிற்காக இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் நடந்தேறிய சம்பவம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை அசித நிரோஷண எகொட வித்தான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 22ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom