இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 ஜனவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-01-08

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம்
C : திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XX, XXI, XXII, XXIII, XXIV, XXV, XXVI மற்றும் XXVII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XIII, XIV, XV, XVI, XVII, XVIII மற்றும் XIX ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான ஆயுள்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான ஆயுள்வேத மருத்துவப் பேரவையின் வருடாந்த அறிக்கை.
(iv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை.    
(vi)    2015/2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(vii)    2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்.
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை.
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான
(ii)    கௌரவ சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர
(iii)    கௌரவ முஜிபுர் ரஹுமான்
(iv)    கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 மற்றும் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iv)    கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ சம்பிக ஹெட்டிஆரச்சி
(ii)    கௌரவ ஹேஷா விதானகே


அதனையடுத்து, 1736 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 9ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom