2024 டிசம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-12-06 |
கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(v) 2023 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு இருபத்து நான்கு (24) அமைச்சுகளுக்கான ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக :-
1. பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு
112 ஆவது நிலையியற்கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் மேலும் இருபத்தொரு (21) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) சட்டவாக்க நிலையியற் குழு
113 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம், சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட மேலும் பத்து (10) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினாறு (16) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iv) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் தவிசாளராகச் சபாநாயகரையும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் ஆறு (06) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(v) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (09) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(vi) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் பிரகாரம், ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பத்து (10) உறுப்பினர்களுக்கு மேற்படாத உறுப்பினர்களை கொண்டிருக்குமாக.
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவானது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்திரண்டு (22) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(viii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்திரண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(ix) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் பிரகாரம் அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட பன்னிரெண்டு (12) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(x) வழிவகைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் பிரகாரம் வழிவகைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xi) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொது மனுக்கள் பற்றிய குழுவானது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பத்தொன்பது (19) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xii) உயர் பதவிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 127 மற்றும் 130(1) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பத்தாவது பாராளுமன்றத்தின் பணியாற்றுவதற்காக உயர் பதவிகள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகக் கொண்டு, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பன்னிரெண்டு (12) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xiii) பின்வரிசை உறுப்பினர் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பின்வரிசைக் குழுவானது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான், தொிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் ஆறு (06) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் ஆறு (06) பின்வரிசை உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 13 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் [வாக்குப் பதிவுக் கணக்கு]
(ii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 241 - நிகழ்ச்சித்திட்டம் 01
(iii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 249 - நிகழ்ச்சித்திட்டம் 01
(iv) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 01
(v) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 126 - நிகழ்ச்சித்திட்டம் 01
(vi) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 224 - நிகழ்ச்சித்திட்டம் 01
(vii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 253 - நிகழ்ச்சித்திட்டம் 01
(viii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01
(ix) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 151 - நிகழ்ச்சித்திட்டம் 02
(x) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 111 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xi) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 126 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 103 - நிகழ்ச்சித்திட்டம் 02
(xiii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 232 - நிகழ்ச்சித்திட்டம் 01
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






