இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-12-05

கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத மற்றும் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அரசியற் கட்சியினை அல்லது சுயேட்சைக் குழுவினைச் சார்ந்துள்ளாரோ அந்த அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவினைச் சாராதோரிலிருந்து அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்     
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IX, X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII மற்றும் XIX  ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் III, IV, V, VI, VII, VIII, IX, X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் V, VI, VII, VIII மற்றும் IX ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI மற்றும் XXII ஆம் பகுதிகள்

(ii) இலங்கைச் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி – வெளிநாட்டு பணவனுப்பல்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01 முதல் 2023 செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 13 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டன. இவை விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-

(i)    அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் [வாக்குப் பதிவுக் கணக்கு]
(ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 241 - நிகழ்ச்சித்திட்டம் 01
(iii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 249 - நிகழ்ச்சித்திட்டம் 01
(iv)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 01
(v)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 126 - நிகழ்ச்சித்திட்டம் 01
(vi)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 224 - நிகழ்ச்சித்திட்டம் 01
(vii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 253 - நிகழ்ச்சித்திட்டம் 01
(viii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01
(ix)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 151 - நிகழ்ச்சித்திட்டம் 02
(x)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 111 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xi)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 126 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 103 - நிகழ்ச்சித்திட்டம் 02
(xiii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 232 - நிகழ்ச்சித்திட்டம் 01


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom