2024 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-12-03 |
கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ முகம்மது சாலி நழீம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : எதிர்க் கட்சியின் முதற்கோலாசானின் நியமனம்
D : தவிசாளர் குழாமில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைத் தாபித்தல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVIII ஆம் பகுதியையும்;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LV மற்றும் LVI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும்;
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV, LV மற்றும் LVI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIX மற்றும் XL ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VII, VIII, IX, X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III, IV, V, VI, VII, VIII, IX, X மற்றும் XI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II, III, IV, V, VI, VII, VIII மற்றும் IX ஆம் பகுதிகள்
(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 36(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலக நிதிக்கூற்றுக்கள் தொடர்பான சுயாதீன கணக்காய்வாளர்களின் அறிக்கை, அச்சட்டத்தின் 36(3) ஆம் பிரிவின் கீழ்
(iii) 2023 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் ஆண்டறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டின் 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12 மற்றும் 13 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் ஜே ஜே டெக்ஸ்டைல்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட் தொடர்பில் அப்போதைய முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதிய 2399/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(iii) 2024 ஆம் ஆண்டுகான நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்) தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi) 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை. (I ஆம் தொகுதி, II ஆம் தொகுதி)
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடத்தில் துறைகளை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 14 ஆம் திகதிய 2336/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழிநுட்ப பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 14 ஆம் திகதிய 2336/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தற்போதைய பாதகமான காலநிலை அனர்த்தம் மற்றும் நிவாரண சேவைகள் தொடர்பான கூற்றொன்றினை பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர், கௌரவ அருண ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) தெரிவுக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இன் பிரகாரம், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) தெரிவுக் குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது இத்தெரிவுக் குழுவில் பின்வரும் பன்னிரண்டு (12) உறுப்பினர்களும் சேவையாற்றுவார்களாக :—
கௌரவ பிமல் ரத்நாயக்க
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர்
கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன
கௌரவ அனுர கருணாதிலக்க
கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ்
கௌரவ எரங்க குணசேகர
கௌரவ முனீர் முலாபர்
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்
கௌரவ ரவி கருணாநாயக்க
கௌரவ பத்மநாதன் சத்தியலிங்கம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






