இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திகதி : 2024-11-27

  • அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில்
  • இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் டிசம்பர் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில்

 

பாராளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் அண்மையில் (நவ. 25) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 4ஆம் திகதியும் குறித்த பிரேரணை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

டிசம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய டிசம்பர் 05ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. இது பற்றிய விவாதத்தை 06ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையும் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.

மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கான விவாதிக்கும் நேரத்தை ஒதுக்குவது, குழுக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமைப்பை நிர்ணயித்தல், தெரிவுக்குழுவை அமைப்பது மற்றும் இதற்கான பெயர்களை முன்மொழிவது, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் ஏனைய குழுக்களை நியமிப்பது, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள், பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தை நியமிப்பதற்கான கோரிக்கையை ஆராய்தல் போன்ற விடயங்கள் குறித்த இங்கு கலந்துரையாடப்பட்டது.

பிரதிச் சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, , எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom