இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூலை 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-25

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)  2023 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(ii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்     3(4) ஆம் பிரிவின் கீழ் கொழும்பு இன்டர்நெசனல் கென்ரேனர் டேர்மினல் லிமிட்டெட் தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மே 03 ஆம் திகதிய 2382/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக  அதன் உறுப்பினர், கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சீ. தொலவத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரை களையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 செப்தெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களுக்கு “காணி அபிவிருத்தி (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii)    கெளரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் சங்கம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 வரையான) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.:-
(i)    பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் - திருத்தங்களுடன்
(ii)    பொருளாதார நிலைமாற்றம் - திருத்தங்களுடன்


அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom