இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூலை 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-24

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : “இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii)    2022 / 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான  ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை

(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    சாதாரண தர பாடங்கள் தொடர்பான கல்வி சீர்திருத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
(ii)    நில்வலா ஆற்றின் குறுக்கே உப்பு தடுப்பணை அமைப்பது தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2024.07.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1543 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 25ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom