இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூலை 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-23

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : “குடிவரவு” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ(1)  உறுப்புரையின் பிரகாரம், சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் இரண்டாவது அறிக்கை

B.    
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகள்

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது ─ ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசர நிதி உதவித் திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது ─ இலங்கையின் தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்தல் தொடர்பான கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2022/2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(x)    2023 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பிரிவுகளின் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான உயர் நீதிமன்றப் பதிவாளரின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xiv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(xv)    2022 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(xvi) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 27, 28 மற்றும் 45 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடனும் கரைகடந்த வங்கித் தொழில் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபையின் ஒருமைப்பாட்டுடனும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூன் 06 ஆம் திகதிய 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 05 ஆம் திகதிய 2378/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2380/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2380/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2380/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2380/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii)    வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லஸந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்                    
(ii)    கௌரவ காமினி வலேபொட                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச
நில்வலா ஆற்றின் குறுக்கே உப்பு தடுப்பணை அமைப்பது தொடர்பான சிக்கல்கள்

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
தேர்தலை நடாத்துதல்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. ஹட்சன் சமரசிங்கவிற்கு திரு.வசந்த சமரசிங்கவினால் விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ செஹான் சேமசிங்க  
வீசா சிக்கல் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் (திருத்தம்) - 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    முற்பாதுகாப்பு வழிமுறைகள் (திருத்தம்) - 2018 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது
(iv)    மத்தியஸ்த சபைகள் (திருத்தம்) - 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க, மத்தியஸ்த சபைகள் சட்டத்தினைத்  திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    நீதித்துறைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இளைஞர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண்பது” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom