இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூலை 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-10

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட திறன்கள் விருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை
(xi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2023 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை

(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர், பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நலின் பிரனாந்து                    
(ii)    கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல                    
(iii)    கௌரவ அஸோக அபேசிங்ஹ            -     இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா                    
(v)    கௌரவ டீ. வீரசிங்க                    
(vi)    கௌரவ ஜகத் சமரவிக்ரம                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024  மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக

(ii) இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை கடற்பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024  மே மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சமன்பிரிய ஹேரத் அவர்களுக்கு “சிறுவர்களுக்கான மஹாவிலச்சிய கல்வி நிலைய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 மற்றும் 5 முதல் 6 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவித்தல்கள்
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv)    அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(ii)    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 11ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom