இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூலை 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
C : “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சரினால் 2024.06.19  ஆம் திகதி  நீதிமன்ற முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தில்  முன்வைக்கப்பட்ட கூற்று மற்றும் பாராளுமன்ற உறுப்பினரொருவராக அவரது சிறப்புரிமைகள், விடுபாட்டுரிமைகள்  மற்றும் தத்துவங்களை மீறியுள்ளமை  பற்றி  கௌரவ பிரதம நீதியரசருக்கு பிரதியுடன் எனக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள 2024.06.25 ஆம் திகதிய  முறைப்பாடு தொடர்பில்,  நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின்  அவதானிப்புகள்  உள்ளிட்ட  அந்த ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் மற்றும் கௌரவ அங்கத்துவ  நீதிபதிகள் இருவரின் கையொப்பத்துடன்கூடிய 2024.06.26 ஆம் திகதிய  அறிக்கை மற்றும் அந்த அறிக்கையுடன் கௌரவ பிரதம நீதியரசரிடமிருந்து  கிடைக்கப்பெற்ற 2024.06.26 ஆம் திகதிய கடிதம்

B.    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XL ஆம் பகுதியையும்;
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LI மற்றும் LII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXV மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான பகிரங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2023 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(x)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 யூலை 04 ஆம் திகதிய 2391/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xi)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கக் கட்டண அறவீடு தொடர்பில்  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்  தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 யூன் 18 ஆம் திகதிய 2389/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.05.01 முதல் 2024.06.07 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xiii)    2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகளுடன், சுற்றுலா  அபிவிருத்தி பிரதேசமொன்றை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 டிசம்பர் 28 ஆம் திகதிய 2364/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா                    
(ii)    கௌரவ அஸோக அபேசிங்ஹ              -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ நிமல் பியதிஸ்ஸ                 -     இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச
ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான தீர்வு

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் பதிலளித்தார்.


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்கள் 2024.07.09 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ 

தன்னைப் பற்றி நீதிச் சேவைகளின் ஊடக அறிக்கை


கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111  இன்  ஏற்பாடுகள் மற்றும் 2022 நவம்பர் 21 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல் 2024 யூலை 03 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்திரண்டு (22) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக

(ii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112  இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினால் தடைபெறாமல், 2024 யூலை 03 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபது (20) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i)    இசிவர அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்ற (கூட்டிணைத்தல்)
(ii)    மனித வளங்கள் துறைசார் வல்லுனர்களின் சங்க (கூட்டிணைத்தல்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 8 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i)    இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    ஜீ.எஸ்.எம்.பீ. தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021)
(iii)    டவர் மண்டப அரங்கத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2021)
(iv)    தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(v)    மாத்தறைப் பருவம் அமைப்பு
(vi)    ஷைலி கல்விசார் மன்றம்
(vii)    சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம்
(viii)    இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“குழந்தை பருவ வளர்ச்சி மையங்களுக்கான ஒழுங்குவிதி” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1823 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 10ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom